Thursday, February 17, 2011

ஞானச்சுடர்


நாம் விரும்பியோ, விரும்பாமலோ, இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒரு நாள், இந்த உலகை விட்டு போய்தான் தீர வேண்டும். அதுவரை இந்த பிறவியால் எவ்வளவோ அழுக்கை நம் மனதில் எற்றுக் கொண்டு விடுகிறோம்.

மனம், வாக்கு, உடம்பு, ஆகிய வற்றால் எவ்வளவோ பாவங்களை செய்து விட்டோம். அதே உடலைக் கொண்டுதான், பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேட வேண்டும்.

சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தவாதிகள் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். நிறைய புண்ணிய காரியங்களைச் செய்து, பாவங்களைக் கரைத்துவிட வேண்டும்.

நம் மனதில் எப்போது ஒழுக்கமும் தூய்மையும் கட்டுப்பாடும் உண்டாகிறதோ, அப்போதுதான் உண்மையான பக்தியும் ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிப்பாடு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!

வளரும் பயிர்களுக்கு வேலிபோட்டால்தான், ஆடு, மாடு போன்ற உயிரினங்களினால் பாதிக்கப்படாமல் வளர்ந்து நிற்கும். அதுபோல நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு வேலி இருக்கிறது, அதுதான் தான தர்மம். இதை செய்யும் போதுதான் பாவங்கள் நீங்கும்.

சந்தனம் என்பது குளிர்ச்சியையும் வாசனையையும் தருவதைப் போல சத்தியத்தை அறிவதற்காகக் கொடுக்கப்பட்ட உடல் இது. அதை அற்பச் செயல்களுக்குப் பயன் படுத்தக் கூடாது.


No comments:

Post a Comment