Friday, February 18, 2011

வெங்காயம்




வெங்காயம் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்திக்கும் நல்ல வகையில் பயன்பட கூடியதாகும். இரத்த விருத்திக்காக என்று புட்டி புட்டியாக டானிக்குகளை சாப்பிடுவோர் ஒரு நாளைக்கு ஒரு வெங்காயத்தை பட்சையாக சாப்பிட்டு வந்தால் போதும். மிகவும் குறைந்த செலவிலேயே அது நல்லதொரு இரத்த விருத்தி டானிக்காக பயன்படும்.

தொடர்ந்து புகைக்கும் காரணத்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தின் சாறு எடுத்து வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுத்து வந்தால் நல்ல குணம் தெரியும். மற்றும் இருமல், கப வாந்தி, இரத்த வாந்தி, நாட்பட்ட சளி போன்றவற்றையும் வெங்காயச் சாறு குணமாக்கும்.

வெங்காயச் சாற்றுடன் கடுகெண்ணை கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் வலி தோன்றும் போது உபயோகிக்கலாம். நல்ல குணம் தெரியும். திடீரென்று மயக்கமடைந்து விழுந்து விட்டவர்களின் மூக்கில் இரண்டொரு துளி வெங்காயச் சாறு விட மயக்கம் தெளிந்து உட்காருவார்கள்.

அரைக்கீரை

 

சிறுநீர் இறங்குவதில் சிரமம் இருந்தால், அரைக்கீரை நிவர்த்தி செய்யும். இந்த கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, பித்தம் தொடர்பான எல்லாப் பிணிகளும் விலகி, நல்ல குணம் தெரியும்.

இஞ்சி


வாய்வையும் கபத்தையும் கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. தொண்டைப் புண், குரல் கம்மல், பித்தம், மயக்கம், நீரிழிவு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி போன்ற பிணிகளுக்கு, இஞ்சிச் சாறு மிகவும் நல்ல மருந்து.

பொதுவாக இஞ்சியைக் கசாயம் செய்து சாப்பிடலாம், உணவோடு அன்றாடம் சேர்த்து கொள்வது உத்தமம். அதிகாலை நேரத்தில் இஞ்சிச் சாறுடன் சர்க்கரைச் சேர்த்து சாப்பிட பித்த மயக்கம், கிறுகிறுப்பு அகலும். இஞ்சிச் சாறும் தேனும் கூட்டி அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் அகலும், இதயம் வலிமை பெறும்.


Thursday, February 17, 2011

ஞானச்சுடர்


நாம் விரும்பியோ, விரும்பாமலோ, இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒரு நாள், இந்த உலகை விட்டு போய்தான் தீர வேண்டும். அதுவரை இந்த பிறவியால் எவ்வளவோ அழுக்கை நம் மனதில் எற்றுக் கொண்டு விடுகிறோம்.

மனம், வாக்கு, உடம்பு, ஆகிய வற்றால் எவ்வளவோ பாவங்களை செய்து விட்டோம். அதே உடலைக் கொண்டுதான், பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேட வேண்டும்.

சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தவாதிகள் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். நிறைய புண்ணிய காரியங்களைச் செய்து, பாவங்களைக் கரைத்துவிட வேண்டும்.

நம் மனதில் எப்போது ஒழுக்கமும் தூய்மையும் கட்டுப்பாடும் உண்டாகிறதோ, அப்போதுதான் உண்மையான பக்தியும் ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிப்பாடு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!

வளரும் பயிர்களுக்கு வேலிபோட்டால்தான், ஆடு, மாடு போன்ற உயிரினங்களினால் பாதிக்கப்படாமல் வளர்ந்து நிற்கும். அதுபோல நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு வேலி இருக்கிறது, அதுதான் தான தர்மம். இதை செய்யும் போதுதான் பாவங்கள் நீங்கும்.

சந்தனம் என்பது குளிர்ச்சியையும் வாசனையையும் தருவதைப் போல சத்தியத்தை அறிவதற்காகக் கொடுக்கப்பட்ட உடல் இது. அதை அற்பச் செயல்களுக்குப் பயன் படுத்தக் கூடாது.


அபிராமி அந்தாதி

அகால மரணத்தைத் தவிர்க்க

ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா
மரைகள் உண்(டு). அந்தகன்பால்
மீளுகைக்(கு) உன்றன் விழியின்
கிடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நிங்குறை
யே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வாணுதலே - 0039




















 
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணை உண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே, உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!

Saturday, February 12, 2011

இம்மாத ஞானமொழி

மாதம்: பிப்ரவரி, 2011

"கற்றது கையளவு, கல்லாதது கடலளவு" என்பது ஔவையின் அருள்மொழி. எவ்வளவுதான் கல்வி கற்று பட்டம் பெற்றிருந்தாலும், ஞானக்கல்வியே முழுமைக் கல்வி. இக்கல்வியே மனிதனாக வாழ வழிக்காட்டுகிறது.

குருவை வணங்கும் கல்வியைக் கற்றுக்கொள்; குணமுள்ள மனிதனாக திகழ்வாய். தர்ம கல்வியைக் கற்றுக்கொள்; உள்ளத்தில் அன்பு பெருகி தர்ம சிந்தனை உடையவனாக போற்றப்படுவாய். அன்பு கல்வியைக் கற்றுக்கொள்; எல்லோருடைய மனதிலும் நீ வாழ்வாய். ஒழுக்கக் கல்வியை கற்றுக்கொள்; வானோர்க்கு நிகராக புகழப்படுவாய்.

சத்தியக் கல்வியை கற்றுக்கொள்; நீதி தவறாத மனிதனாக பூலோகத்தில் உலா வருவாய். அடக்கக் கல்வியைக் கற்றுக்கொள்; அமைதி நிறைந்தவனைக் காண்பாய். புண்ணியக் கல்வியைக் கற்றுக்கொள்; புனிதனாக இறையருள் பெற்றுக் காணப்படுவாய்.

மேற்கண்ட கல்விகள் யாவும் நமக்காக மகான்கள் விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள் ஆகும். ஆக இத்தகைய கல்வியை ஒவ்வொரு மாந்தரும் தவறாது கற்று, பிறவி துன்பத்திலிருந்து விடை பெறுவோம். ஞானக் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து நாம் எல்லோரும் செயல் படுவோம்.

"எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், கற்று விட்டேன் என்று ஏமாந்து விடாதே! நீ படிக்க வேண்டியதும், கற்க வேண்டியதும் இன்னும் கடல் போல் இருக்கின்றது என்பதை மறந்து விடாதே மனமே!".

Monday, February 7, 2011

இம்மாத ஞானமொழி

மாதம்: ஜனவரி, 2011

நல் மனிதர்களாக வாழ்வதற்கு, நல் எண்ணங்கள் கொண்டிருத்தல் அவசியம். நல் எண்ணம் கொண்டிராத மனிதன், பிறரின் அன்பை பெற முடியாது. பிறரால் எப்போதும் தூற்றப்படுவான், தனித்தே இயங்குவான். இவனால் அவனுக்கோ, சமுதாயத்திற்கோ எந்த பயனும் இல.


  • மனிதர்களை நேசியுங்கள், அவர்களுக்கு முடிந்த தொண்டுகளைச் செய்யுங்கள், ஆனால் யாருடைய பாராட்டுக்கும் ஆசைப்படாமல் இருங்கள்.
  • கடவுளின் படைப்பில் அற்பமானவர்கள் என்று யாருமில்லை. ஆகவே யாரையும் ஏளனம் செய்யாதீர்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்.
  • உங்களது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அனுபவங்களை வழங்குங்கள், அதுவே உங்களுக்குள் இருக்கும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை போன்றதாகும்.
  • வெறுமனே யாருக்கும் பயனில்லாமல் வாழ்வதைவிட, நல்ல லட்சியங்களை உருவாக்கிக் கொண்டு, அதை நோக்கிப் பயனிப்பதில்தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது.
  • மீண்டும் மனித பிறவி நமக்கு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அதனால், கிடைத்த பிறவியை பயனுடையதாக்கிக் கொள்வது நமது கடமை.
  • மனித மனம் லாவகமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு கருவி. சரியான எண்ணங்களை அதில் புகுத்தினால்தான், அதனை முறையாக இயக்க முடியும்.
  • இன்று நம்மில் பெரும்பாலோர், வாழ்வில் விலக்க வேண்டிய விஷயங்களை திரும்ப திரும்ப சிந்திக்கிறார்கள், இது தவறு என்பது புரியாமலிக்கிறார்கள்.
  • வாழ்க்கையோடு நாம்தான் விளையாட வேண்டுமே தவிர, வாழ்க்கை நம்மோடு விளையாட அனுமதிக்கக் கூடாது. முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இது சாத்தியம்.
  • மேற்கண்ட ஆன்றோர்களின் அருளுரைகளை, நாம் மனதில் எப்போதும் சுமந்து கொண்டால், நமது வாழ்வில் பல துன்பங்களை வெல்லலாம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ** *
Translation

Good thinking is a must if one wants to ‘LIVE’ life to the fullest. And one can’t except love from others in the absence of good thoughts. Moreover, such a person is of no use to themselves and to society. Therefore: 
  • Be nice to people; do what you can without expecting to gain.
  • Don’t disregard or be offensive to anyone; love all.
  • Your thought s, deeds and sayings must make others happy that will be your gift to GOD.
  • Rather than be of no use to anyone; living a life of worthy values and virtues that will give meaning to your very existence.
  • We may reincarnate, or not at all. However, be duty-bound to benefit from your current existence and live life as you should.
  • Fill your mind with the right thoughts and that will help us direct it as we want.
  • Many of us continue to dwell on issues that must be forgotten; let us avoid that hereafter.
  • We must manage life and not the other way around. That is possible if we are on the right track.
Keep the above close to your heart and live them. Observe as all your troubles melt away, and savor victory over them.