Monday, May 23, 2011

கடவுளை நொந்துக் கொள்வது ஏன்?


கடவுள் என்பவர் யார், அவரின் குணங்கள் யாது, என்று எதுவுமே தெரியாமல் அவரை நொந்துக் கொள்பவர்களை என்ன வென்று சொல்வது?

"இறைவன் தூணிலும் இருப்பான்...துறும்பிலும் இருப்பான்"!

இந்த அடைமொழியை என்றோ பதித்து சென்றவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் என்னை கேட்டால் இறைவன் எங்கும் ஒழிந்திருக்கவில்லை...அவர் நம்முள்ளே(நமக்குள்) மிக ஆழமாய்; அழுத்தமாய்; மிக ஆனந்தமாய், நம் மனம் எனும் கட்டாந்தரையில் என்றோ வந்து அமர்ந்துவிட்டார் அல்லது அமர்ந்திருக்கிறார் என்றே கூறுவேன்.

கடவுளானவர் அமைதியே சொரூபம் ஆனவர்; அன்பானவர்; யாருக்கும் எதற்காகவும் தீங்கு நினையாதவர்; நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒவ்வொரு தவற்றையும் மன்னித்து ஏற்பவர்; அவரை உண்மை அன்போடு நேசித்து வருவோரின் ஊனிலே உறைந்து, ஒவ்வொன்றிக்கும் உறுதுணையாய் நிற்பவர்...! அவரே கடவுள்!

கடவுளை முழுமையாக உணராதவர்கள், அவரை நொந்துக் கொள்வதில் எந்த ஒரு பலனும் அல்லது பயனும் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும்! நாம் வணங்கும் கடவுளினால், நாம் படும் கஷ்டங்களைக் குறைக்க முடியுமே தவிர கஷ்டங்களே நடக்காமல் செய்து விட முடியாது. நாம் என்றோ (முற்பிறவியின் தாக்கங்களாக இருக்கலாம் அல்லது இப்பிறவியில் புரிந்த முன்வினைக் காரணங்களாக கூட இருக்கலாம்) செய்த கருமங்களின் பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே உலகின் நியதி. சித்தர்களும் இதற்கு விதி விளக்கல்ல.

நம்மில் பலர் நன்றாய் வாழும் போது, கடவுளை நினைத்துப் பார்ப்பதே இல்லை; காலையும் மாலையும் கடவுளின் முன் நின்று, ஒரு 'சல்யூட்' (salute) அடிப்பதையே ஒரு தொழிலாய் கொண்டிருக்கின்றனர். துன்பம் வந்த பிறகே கடவுளை தேடுவது இன்று வாடிக்கையாய் போய்விட்டது. பல மடங்கான துன்பங்களை அனுபவித்த போதினும், இறைவனின் கால்களை இருக்கமாய் பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தவர்கள், கணக்கில் அடங்கா! இறைவனை நொந்து திரிந்தவர்கள் வாழ்க்கையெனும் கடலில் கரை சேர்ந்ததாய் சரித்திரம் இல்லை.

உலகில் துன்பத்தை பற்றி அறியாதவர்கள் யாரேனும் உண்டா?

ஆகவே, முதல் வேலையாக உங்களை நீங்களே நேசிக்க தொடங்குங்கள்!

ஓவ்வொரு நாளும் கடவுளை நினைத்து வழி படுங்கள்; ஒரு நாளில் இரு வேளையும் குறைந்தது 15 அல்லது 30 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்!

காலையில் கடவுளை நினைத்து விழி தளர்த்துங்கள்...அழகான விடியலை கொடுத்ததிற்கு!

இறவில் அவரை நினைத்து விழி சாயுங்கள்...நிம்மதியான தூக்கம் மற்றும் வாழ்க்கை தந்ததிற்கு!

எத்தனையோ கோடான கோடி ஜனங்கள் உண்ண உணவில்லாமல் வாழ்வதை நினைத்துப் பார்த்து, சோற்றின் முதல் பருக்கை நாவில் வைப்பதற்கு முன், கடவுளுக்கு மனதார நன்றி சொல்லுங்கள்!

அவர் எங்கும் இல்லை...உங்களில் ஒருவராய் எங்கும் சூழ்ந்திருக்கிறார்.


அன்புடன்,

தமிழருவி

No comments:

Post a Comment