Wednesday, March 9, 2011

நிம்மதி

சில நேரங்களில் என்னையும் மீறி, கறுப்பு காலங்களின் நினைவலைகள் தாக்கம் தொடர்கிறது என்னுள்!
"கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்" - என
கெஞ்சி குழையும் நெஞ்சம் - அதன்
வழி தாங்காமல் கன்னத்தை குளமாக்கும்,
கண்ணீர் துளிகள்!

இருந்தும் ஏதோ ஒன்று, என் மனதின் வழி கோர்த்து,
என்னை இருக்கி அணைத்து, அதன் தோள் சாய்க்கிறது...
இதமாய் தலைச்சாய்ந்துக் கொள்ள, லேசாய் ஆகிறது மனதின் பாரம்!

உடல் சிலிர்த்து போக, கண்களை மூடிக்கொள்கிறேன்...
என் மெய் அறியாமல் முணு முணுக்கின்றன இதழ்கள்...

நெஞ்சாற நினைப்பவர்க்கு நிழல்போல் இருப்பவரே...
ஒவ்வொரு வினாடியும் உங்களின் நீங்காத நினைவோடு
இருக்குமென் குலம் தழைக்க செல்வமாவோரே!
உங்களின் புகழ் பாடுகின்ற எனக்கு கொடுமையான சாபமில்லை;
ஒரு வினையும் வர போவதில்லை!
வேல்போல் துணையிருந்து, அஞ்சாதீர் என கூறி,
எம்பெருமான் நீங்களே என்னின் துணையாய்யிருக்க - எனக்கு
வெற்றியே உண்டாகும்...
யுகம் யுகமாய் தோன்றும் அருட் குருவே...
உங்களை என்றும் அகத்துள் வைத்திருக்கிறேன்...
என்னை காத்து அருள்வீராக!

ஓம் ஸ்ரீ குரு அகத்தீஸ்வராய நமஹ!

யாரோ அழைக்கும் குரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன்...
"சீக்கிரம் வாங்க, நேரம் ஆச்சு!", என உறவொன்று அழைக்க, 
பூஜை அறையிலிருந்து கால்கள் விரைந்து செயல்படத்தொடங்குகின்றன!

இருந்தும்...
எதையோ விட்டு செல்வதாய் நினைத்து,

அங்கேயே நிலைக்குத்தி நிற்கிறது மனசு!




No comments:

Post a Comment